ETV Bharat / sitara

'90% பொண்டாட்டிங்க பேய் தானே' - போஸ்டரால் சர்ச்சை

author img

By

Published : Mar 8, 2021, 5:28 PM IST

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை அவமானம் படுத்தும் விதமாக, 'நாயே பேயே' படத்தின் போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

nayae
nayae

'தனி ஒருவன்', 'வழக்கு எண் 18/9', 'ஒரு குப்பையின் கதை' ஆகிய வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோபி கிருஷ்ணா. தற்போது இவர் 'நாயே பேயே' படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 'கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ்' சார்பில் கலை தி ஆர்ட் புரொடக்சன் உடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தை சக்தி வாசன் இயக்குகிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா, 'ஆடுகளம்' முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ராகேஷ், கிருஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. டீசரில் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

nayae
சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8) பெண்களை அவமதிக்கும் விதமாகப் போஸ்டரை 'நாயே பேயே' படக்குழுவினர் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர். "இந்த போஸ்டரில் மொத மொதல்ல பேய கல்யாணம் பண்ணிக்கப்போறது நான் மட்டுந்தானா? 90% பொண்டாட்டிங்க பேய் தானே?" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.