கரோனா தொற்றால் கடும்பாதிப்பைச் சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்ட 'நவரசா' என்னும் ஆந்தாலஜி இணையத் தொடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒன்பது இயக்குநர்கள் இயக்கும் இப்படத்தை, மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஒன்பது குறும்படங்களின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகையர், இயக்குநர் குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'நவரசா' ஆந்தாலஜி படத்தின் டீஸர் இன்று (ஜூலை 9) காலை 9.09 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக ஆந்தாலஜி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.
இதையும் படிங்க: கௌதம் மேனன் படத்திற்கு வசனம் எழுதும் ஜெயமோகன்