நடிகர்கள் நட்டி, லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'காட்ஃபாதர்'. அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, ஜி. மாரிமுத்து, சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அஷோக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன்-திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவின் ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.
சதுரங்க வேட்டை, ரிச்சி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நட்டி மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்குவரவுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் லால் தொடர்பான காட்சிகள், வசனங்கள் மிரட்டலாக அமைந்துள்ளன. தற்போது 'காட்ஃபாதர்' படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சந்தானம் ஆகியோர் வெளியிட்டனர்.
-
Happy to release #GodFather Official trailer. Best wishes team
— karthik subbaraj (@karthiksubbaraj) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dir @jeganrajshekar@natty_nataraj @Lal_Director @FirstClap1
@shammysaga
@actorashwanth @LahariMusic@ananyaonline@ajithvasudev04@naviinravindran@theedittable @onlynikilhttps://t.co/VzAZBCMYua
">Happy to release #GodFather Official trailer. Best wishes team
— karthik subbaraj (@karthiksubbaraj) January 6, 2020
Dir @jeganrajshekar@natty_nataraj @Lal_Director @FirstClap1
@shammysaga
@actorashwanth @LahariMusic@ananyaonline@ajithvasudev04@naviinravindran@theedittable @onlynikilhttps://t.co/VzAZBCMYuaHappy to release #GodFather Official trailer. Best wishes team
— karthik subbaraj (@karthiksubbaraj) January 6, 2020
Dir @jeganrajshekar@natty_nataraj @Lal_Director @FirstClap1
@shammysaga
@actorashwanth @LahariMusic@ananyaonline@ajithvasudev04@naviinravindran@theedittable @onlynikilhttps://t.co/VzAZBCMYua