திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது.
அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான விருது பெற்றோர் விவரம் பின்வருமாறு:
- சிறந்த திரைப்படம் - இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன்
- சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
- சிறப்பு விருது - இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு'
- சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
- சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்)
- சிறந்த ஒலிப்பதிவாளர் - ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு)
- குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)