திரைப்படதுறைக்கான தேசிய திரைப்பட விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழங்கிவருகிறது. அதன்படி தற்போது 66-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற படங்கள், நடிகர்கள் குறித்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர் குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ’419 படங்கள், இந்தாண்டு போட்டியிட்டன. இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
இதனையடுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
சினிமா ஃப்ரெண்ட்லி ஸ்டேட் விருதை உத்தரகாண்ட் மாநிலம் வென்றுள்ளது.
சிறந்த தமிழ் படம் - பாரம்
சிறந்த ஆக்ஷன் படம் - கே.ஜி.எஃப்
சிறந்த தெலுங்கு படம் - மகாநடி
சிறந்த மலையாள படம் - சுடானிஃப்ரம் நைஜீரியா
சிறந்த இந்தி படம் - அந்தாதுன்
சிறந்த சமூக கருத்து கொண்ட படம் - பேட்மேன்
சிறந்த படம் - ஹிலாரோ
சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)
சிறந்த நடிகர் - ஆயுஷ்மான் குரானா (அந்தாதுன்), விக்கி கவுசல் (உரி)
சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி)
சிறந்த நடனம் – கொமார் (பத்மாவத் )
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – கே.ஜி.எஃப், அவே
சிறந்த ஒளிப்பதிவாளர் - எம். ஜே. ராதாகிருஷ்ணன் (ஒலு - மலையாளம்)
தமிழில் விருது வென்ற 'பாரம்’ திரைப்படத்தை ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கி உள்ளார். தென் தமிழ்நாட்டில் வயதானவர்களை தலையில் விளக்கெண்ணெய் தேய்த்து மூச்சுமுட்ட தண்ணீரில் மூழ்கடித்து சாகடிக்கும் போக்கை விவரிக்கும் கருணைக் கொலை குறித்து இப்படம் பேசுகிறது.