ETV Bharat / sitara

அதர்வாவுக்கு வில்லனான நந்தா - அதர்வா

நடிகர் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க நந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

அதர்வாவுக்கு வில்லனான நந்தா
அதர்வாவுக்கு வில்லனான நந்தா
author img

By

Published : Mar 20, 2020, 4:42 PM IST

'மௌனம் பேசியதே' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்தா. இவர் கடைசியாக சரத்குமார் நடிப்பில் வெளியான 'வானம் கொட்டட்டும்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவர் அடுத்ததாக நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இதில், நந்தா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ரவீந்திர மாதவா இயக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "இந்த படம் தொடங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் சிறப்பான வில்லன் கதாபாத்திரம் குறித்து அனைவரிடமும் கூறியிருந்தேன். திரையில் அந்த கதாபாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேர்தெடுக்க நினைத்தோம். இறுதியாக நந்தா இதற்கு சரியாக தோன்றினர். அதனால் அவரைத் தேர்வு செய்தோம்.

எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். படத்தில் உள்ள வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். இந்தத் திறமை நந்தாவிடம் இருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு தயாராக உள்ளோம். கரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர் - தக்க பதிலடி கொடுத்த நமிதா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.