ETV Bharat / sitara

என்ன வாழ்க்கை இது: நல்லகண்ணு - nallakannu

சென்னை: ’கொடுமையைப் பார்த்தால் கோபம் வராது, சோகத்தைப் பார்த்தால் அழுகையும் வராது, பெண்ணைப் பார்த்தால் காதலும் வராது என்றால் என்ன வாழ்க்கை இது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

முந்திரிக்காடு
author img

By

Published : Jul 28, 2019, 1:02 PM IST

இயக்குநர் மு களஞ்சியத்தின் தயாரிப்பில் தயாராகியுள்ள படம் ”முந்திரிக் காடு”. இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் மகேந்திரனின் மகன் புகழ், கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, சி. மகேந்திரன், சீமான், இயக்குநர் ராஜுமுருகன், இயக்குநர் சசி ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் இசை குறுந்தகட்டை சீமான் வெளியிட தயாரிப்பாளர் ஜி.வி. ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த நிகழ்வுகள் ”சொல்லாத கதைகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை நல்லகண்ணு வெளியிட இயக்குநர் ராஜுமுருகன், இயக்குநர் சசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் நல்லகண்ணு பேசுகையில், “இந்தப் படத்தின் கருத்து விரைவில் வெளியில் வரவேண்டும் என்று எண்ணினேன், ஏங்கினேன். இந்தப் படம் உருவாக காரணமானவர்களைப் பாராட்டுகிறேன். நூற்றுக்கணக்கான ஆணவக்கொலை நடக்கும்பொழுது அதை பார்ப்பவர்களுக்கு உணர்வுகள் வரவில்லையே என்று கவலையாக இருக்கும்.

கொடுமையைப் பார்த்தால் கோபம் வராது. சோகத்தைப் பார்த்தால் அழுகையும் வராது, பெண்ணைப் பார்த்தால் காதலும் வராது என்றால் என்ன வாழ்க்கை இது. நடப்பது நடப்பதாகவே இருக்கிறது. வாழ்வது வாழ்வதாகவே இருக்கிறது. இறப்பது இறப்பதாகவே இருக்கிறது. எந்த சாதியும் மேல் சாதி, கீழ் சாதி என்று இல்லை. வெளியில் நடக்கும் ஆணவக் கொலைகள் குறையவேண்டும்” என்றார்.

முந்திரிக்காடு இசை வெளியீட்டு விழா
முந்திரிக்காடு இசை வெளியீட்டு விழா

அதனையடுத்து இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், ”சில பேர் இயக்குநர்கள் அல்ல; சமூக செயற்பாட்டாளர்கள் என்றுதான் நான் கூறுவேன். மக்கள் அரசியலின் ஆயுதம்தான் இந்தப் படம். இந்தப் படம் சமகாலத்தில் வரக்கூடிய முக்கிய படமாகவும் சாதிக்கு எதிரான ஒரு ஆயுதமாகவும் இருக்கும்.

சாதி ஒழிப்பை ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கவேண்டும். பார்ப்பனர்கள் யார் என்றால் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். பண பலம் நிறைந்த இரண்டு கட்சிகள். அது கட்சிகள் அல்ல; இரு கம்பெனிகள். அவற்றை எதிர்த்து பெரும் இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார் சீமான்” என்றார்.

Intro:இந்திய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சி. மகேந்திரனின் மகன் சினிமா பிரவேசம் Body:இயக்குனர் மு களஞ்சியத்தின் தயாரிப்பில் தயாராகியுள்ள படம் முந்திரிக் காடு இந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நல்லக்கண்ணு, சி மகேந்திரன் ,சீமான் ,இயக்குனர் ராஜுமுருகன்,இயக்குனர் சசி ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் இசை குறுந்தகட்டை சீமான் வெளியிட தயாரிப்பாளர் G.V.ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.இந்த படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த நிகழ்வுகளை சொல்லாத கதைகள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை நல்லகண்ணு அவர்கள் வெளியிட இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் இயக்குனர் சசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நல்லகண்ணு பேசுகையில்.

இந்த படத்தின் கருத்து விரைவில் வெளியில் வரவேண்டும் என்று எண்ணினேன், ஏங்கினேன்.
இந்த படம் உருவாக காரணமானவர்களை பாராட்டுகிறேன். நூற்றுக்கணக்கான ஆனவக்கொலை நடக்கும்பொழுதும் அதை பார்ப்பவர்களுக்கு உணர்வுகள் வரவில்லை என்று கவலையாக இருக்கும்.

கொடுமையை பார்த்தால் கோபம் வராது.
சோகத்தை பார்த்தால் அழுகையும் வராது,
பெண்ணை பார்த்தால் காதலும் வராது என்றால் என்ன வாழ்க்கை இது. நடப்பது நடப்பதாகவே இருக்கிறது.
வாழ்வது வாழ்வதாகவே இருக்கிறது.
இறப்பது இறப்பதாகவே இருக்கிறது. எந்த சாதியும் மேல் சாதி கீழ் சாதி என்று இல்லை.
வெளியில் நடக்கும் ஆணவ கொலைகள் குறையவேண்டும்.

ராஜுமுருகன் பேசுகையில்,

சில பேர் இயக்குனர்கள் அல்ல சமூக ஆர்வலர் என்று தான் நான் கூறுவேன்.மக்கள் அரசியலின் ஆயுதம் தான் இந்த படம்.

சமகாலத்தில் வரக்கூடிய முக்கிய படமாகவும் சாதிக்கு எதிரான ஒரு ஆயுதமாகவும் இருக்கும். சாதி ஒழிப்பை ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கவேண்டும்.

பார்ப்பனர்கள் யார் என்றால் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான்.
பண பலம் நிறைந்த இரு கட்சிகள் அது கட்சிகள் அல்ல அது இரு கம்பெனிகள் அவற்றை எதிர்த்து பெரும் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சீமான்.

சீமான் பேசுகையில்

பேசஆரம்பிக்கும் போது கோவப்படுவத்தில்லை
இதயத்தில் நெருப்பு எரியும் போது சில பொறிகள் விழதான் செய்யும்
பரியேறும் பெருமாளை போல நேரிடை தாக்குதல்.
பிரச்சனை என்று வரும் போது தமிழன் தலைகுனிய வேண்டாம்.
ஆதி பாட்டன் சிவனே பறையன் தான்.ஜாதி இரண்டு தான் கொடுப்பவன் உயர்ந்தவன் தனக்கென இருப்பவன் தாழ்ந்தவன். சுடுகாட்டில் கூட ஆறுமுக கவுண்டர்
சுப்பிரமணிய நாடார் என்று எழுதி வைத்துள்ளனர் ஜாதி அங்குள்ளது

ஜாதி மறுப்பு திருமணம் என்று சொல்லாமல் கலப்பு என்று கூறுவது தவறு ஆடு மாடுகள் ஓடுவார் திருமணம் செய்கிறாய் கலப்பு என்று கூறுவதற்கு மனிதனை தானே திருமணம் செய்கிறான்.

நாக்கினை திருத்த இயலாதவன் நாட்டினை எப்படி திருத்துவான் ஆங்கிலத்தில் பேசுகிறான் நாக்கில் கூட தமிழ் வரவில்லை.
தமிழனே தாழ்த்தப்பட்டவன் எங்களை ஏதாவது ஊடகம் காட்டுகிறதா பத்திரிகை காட்டுகிறதா?தமிழருக்கு எதிரி வெளியே இல்லை .

தன் இன பகைதான் ஜாதி என்னும் பகை உள்ளது.ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர்கள் பலர் இன்று ஜாதி குறியீடாக உள்ளனர்.ஜாதிக்கு இரத்த வெறி உள்ளது இரத்தத்திற்கு ஜாதி வெறியில்லை.கட்டை வண்டியில் செல்லும் போது இருந்த ஜாதி இரயிலோ விமானத்திலோ செல்லும் போது இல்லை.கோயில்களில் இருக்கின்ற ஜாதி திரையரங்குகளில் செத்து போய்விட்டது அதனால் கோவில்களை விட திரையரங்குகளை அதிகம் கட்ட வேண்டும் ஏனென்றால் டிக்கெட் வாங்கினால் யார் வேண்டுமானாலும் கால்மேல் கால் போட்டு உட்காரலாம்.ஒரே நாளில் பணம் செல்லாது என்றது போல் ஜாதிகள் இல்லையென்று சொல்லுங்கள்.வங்கி தேர்வில் உயர்ந்த ஜாதி பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு ஆதரவாக உள்ளது,ஜாதி பற்று தான் தமிழனுக்கு ஊட்டபடுகிறது, அரசு அதிகாரங்கள் அங்கீகரிக்கிறது ஜாதியை, நல்லக்கண்ணு அவர்கள் ஒரு பதவியை கூட அனுபவித்ததில்லை, *மண் அள்ளுவதற்கு புதிய பெயர் தூர் வாருவது

சில இனங்களுக்கு எப்போதாவது போராட்டம் வரும் தமிழனத்திற்கு வாழ்க்கையே போராட்டமாக உள்ளது. தேய்ந்த கால் செருப்பு போல கடந்து செல்கிறார்கள் இன்னும் சில காலங்களில் ஜாதி மதம் பற்றி பேசுபவர்கள் வக்கத்து போவார்கள், ஜாதியை ஒழிக்க இருக்கின்ற கடைசி வாய்பு நாம் தமிழர்கள் என்கிற அடையாளம் , Conclusion:மனிதனை மனிதன் தாழ்த்தி சுகம் காண்பது ஒரு மன நோய்
முந்திரிக் காடு படம் வரும் போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.