தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு 'மன்மதடு 2' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார்.
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஆஃபிஸர் ' திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்திலும் நாகார்ஜுனா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் சாலமன் இயக்கும் இந்தப்படத்தை மேட்னி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பாட் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் பிரமாண்டமாக உருவாகிவரும் 'பிரம்மாஸ்திரா' திரைப்படத்திலும் நாகார்ஜுனா நடித்துவருகிறார்.
இதையும் படிங்க... 2020ல் வெளியாகும் தமிழ் ஸ்டார்களின் படங்கள்