ETV Bharat / sitara

நடக்குமா நடிகர் சங்கத் தேர்தல்? பதிவாளர் உத்தரவால் சலசலப்பு

File pic
author img

By

Published : Jun 19, 2019, 12:22 PM IST

Updated : Jun 19, 2019, 1:12 PM IST

2019-06-19 12:16:18

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலை நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக 62 பேர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதால், தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனு மீது தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் விஷால் தொடர்ந்த மனுவை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 19, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.