கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து தனுஷ் கைவசம் சுமார் 5 படங்கள் உள்ளன.
அதில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படமும் அடங்கும். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு 'நானே வருவேன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய தலைப்பும், ஏன் தலைப்பு மாற்றப்பட்டது என்பது குறித்த காரணமும் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ட்விட்டர் ட்ரெண்ட்: 100 நாட்களில் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்