கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'நாய் சேகர்'. ஜார்ஜ் மரியன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம், 'கலக்கப் போவது யாரு' பாலா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் பேசுகையில், "ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு.
தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் படம் அமைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஸ்ரீதேவியின் 2 மகள்களுக்கு கரோனா பாதிப்பு