ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'அண்ணாத்த...அண்ணாத்த' பாடல் இன்று (அக்.04) மாலை வெளியாகியுள்ளது.
இப்பாடல் குறித்தும் இப்பாடலைப்பாடிய எஸ்.பி.பி குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
45 ஆண்டுகளாக என் குரல் எஸ்.பி.பி
அதில், '45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள், 'அண்ணாத்தே' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
என் அன்பு எஸ்பிபி, தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்' என்று பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.