ETV Bharat / sitara

'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கும் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (செப்டம்பர் 2) வெளியாக உள்ளது.

author img

By

Published : Sep 1, 2020, 10:15 PM IST

muthalum nee mudivum nee
muthalum nee mudivum nee

தமிழில் 'ராஜ தந்திரம்' படம் மூலம் நடிகராகவும், சசிகுமாரின் 'கிடாரி' படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி அதன்பின் 'நிமிர்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் மூலம் முன்னணி இசையமைப்பாளராக மாறி பன்முகக் கலைஞராக விளங்குபவர் தர்புகா சிவா.

ஏற்கனவே இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ள தர்புகா சிவா, 'முதல் நீ முடிவும் நீ' என்ற படத்தை இயக்குவதன் மூலம் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிக்கிறார். ‘துருவங்கள் பதினாறு’ புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், உலக புகைப்பட தினமான ஆக.19ஆம் தேதி படக்குழுவினர் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். முன்னதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (செப்டம்பர் 2) வெளியாகிறது. தாமரை பாடல் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில், "முதல் நீ... முடிவும் நீ" பாடல் வெளியாக உள்ளது.

முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு இயக்குநராக மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் தர்புகா சிவா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.