நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் பிக்சர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதால் இது அரசியல் படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் இது ஒரு கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இப்படத்தில், ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
ஏற்கனவே ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் எஸ். பி. பியே ரஜினிக்கு அறிமுகப் பாடலைப் பாடிய நிலையில், பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய முயற்சியாக அனிருத், எஸ். பி. பியுடன் இணைந்து 'மாஸ் மரணம்' என்ற அறிமுகப் பாடலைப் பாடினார்.
இந்த முறை எந்தத் தலையீடும் இல்லாமல் எஸ். பி. பியை மட்டுமே அனிருத் அறிமுகப் பாடலைப் பாட வைத்துள்ளாராம்.
இதையும் படிங்க: அண்ணிக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசளித்த தனுஷ்!