ETV Bharat / sitara

'கட்டில்' பட பணிக்கிடையே ஸ்ரீகாந்த் தேவாவின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்

author img

By

Published : Jul 21, 2020, 11:38 AM IST

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இந்தாண்டு எளிமையான முறையில் கட்டில் திரைப்பட இயக்குநருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Music director srikanth birthday celebration
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடியுள்ளார்.

இது குறித்து கட்டில் திரைப்படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான கணேஷ் பாபு கூறியதாவது:

விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா எனது கட்டில் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா வழக்கமாக தனது பிறந்தநாளை இயக்குநர்கள், நடிகர்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு மிக கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி எல்லோரின் மனதையும் கொள்ளையடிக்கும் என்பது உறுதி.

கரோனாவிலிருந்து மீண்டு சினிமா உட்பட உலகின் அனைத்து தொழில்களும் புதிய உற்சாகத்துடன், புதிய வேகத்துடன் முன்பைவிட பலமடங்கு வீரியத்துடன் விஸ்வரூபம் எடுத்து புதிய பரிணாமத்தில் பயணிக்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'இயக்குநர் சசிகுமாரின் பாராட்டு மிகப்பெரிய அங்கீகாரம்' - இ.வி. கணேஷ்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.