நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் பாதிப்பு பெருமளவில் இருப்பதால் மூன்றாவது முறையாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பொது மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்வதாக கூறி வெளியே செல்கின்றனர்.
இந்நிலையில் கரோனா குறித்து காவல் துறையினர், தன்னார்வலர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு பாடல் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் செந்தில் தாஸ் தானே இசையமைத்து, விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். 70 களில் மிகவும் பிரபலமான ’சுராங்கனி மாலு கெனா வா’ பாடலை அப்படியே கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி எழுதியுள்ளார், நீலகண்டன்.
இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ. கௌதமன்