தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏர்.ஆர். ரகுமான். இவர் 2008 ஆம் ஆண்டு சிலம்டாக் மில்லியனயர் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று (டிசம்பர் 13) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தேன். அப்போது, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
-
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் @arrahman அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். 1/2 pic.twitter.com/9vdNREGTDh
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் @arrahman அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். 1/2 pic.twitter.com/9vdNREGTDh
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 13, 2021ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் @arrahman அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். 1/2 pic.twitter.com/9vdNREGTDh
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 13, 2021
இதையும் படிங்க: அமித் ஷா முதல் வாழவைத்த தெய்வங்கள் வரை: லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன ரஜினி!