திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற துயரம் நிறைந்த சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இசையமைப்பாளர் இமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இல்லையடி பாப்பா! என்கிற நிலை விரைவில் வரட்டும்' என குறிப்பிட்டிருக்கிறார்.
-
ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! என்கிற நிலை விரைவில் வரட்டும்...
— D.IMMAN (@immancomposer) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🙏 -டி.இமான்
">ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! என்கிற நிலை விரைவில் வரட்டும்...
— D.IMMAN (@immancomposer) October 30, 2019
🙏 -டி.இமான்ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! என்கிற நிலை விரைவில் வரட்டும்...
— D.IMMAN (@immancomposer) October 30, 2019
🙏 -டி.இமான்
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டதை அடுத்து, படிப்படியாக அதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்