ETV Bharat / sitara

கோலிவுட்டில் அறிமுகமாகும் இசை ஆல்பம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி - ஹார்ட் பிரேக்கர்

சென்னை: இசை ஆல்பம் மூலம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி விரைவில் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.

மனோஜ் சின்னசாமி
மனோஜ் சின்னசாமி
author img

By

Published : Oct 24, 2020, 3:32 PM IST

கோயம்புத்தூரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் மனோஜ் சின்னசாமி. ஆரம்பத்தில் இசை ரசிகராக இருந்தாலும், தனக்கு
இருக்கும் இசை ஆர்வத்தினால், வெறும் ரசிகராக மட்டும் இன்றி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஐடி துறையில் இருந்து இசைத்துறைக்கு வந்திருக்கிறார்.

முறைப்படி சங்கீதம் படித்து சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் இசை படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு பல்வேறு விளம்பர படங்களுக்கு இசையமைத்ததோடு, 'முத்தழகி' உள்ளிட்ட இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் ஆகியோரது வரிசையில், சிறப்பான மெட்டுக்களோடு, இசையில் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கும் மனோஜ் சின்னசாமி, மெலோடி பாடல்களை மேற்கத்திய இசையாக கொடுப்பதில் தனித்துவம் மிக்கவர்.

கோலிவுட்டில் தற்பொழுது இசை ஆல்பங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமியின் ஆல்பம் திரைத்துறையில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மனோஜ் சின்னசாமியின் இசையமைப்பில் திங்க் மியூசிக் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஹார்ட் பிரேக்கர்’ இசை ஆல்பம் வெளியான சில நாட்களிலே ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

'ஹார்ட் பிரேக்கர்' இசை ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பல பிரபலங்கள் மனோஜ் சின்னசாமியை பாராட்டியுள்ளனர்.
மனோஜ் சின்னசாமி கோலிவுட் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக விரைவில் அறிமுகமாக உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.