'ராஜதந்திரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. அதனைத் தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து இவர் தற்போது 'முதல் நீ முடிவும் நீ' படத்தை இயக்கியுள்ளார்.
இதில் அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ், ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'முதல் நீ முடிவும் நீ' படம் வரும் 21 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இயக்குநராகக் களமிறங்கிய தர்புகா சிவாவின் படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் 'முதல் நீ முடிவும் நீ' திரைப்படம், நியூயார்க் திரைப்பட விழாவில், 'சிறப்பு மென்ஷன்' விருதும் மாசிடோனியா கலை திரைப்பட விருதுகள் விழாவில், 'சிறந்த இயக்குநர்' விருதும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்...!