நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுவரும் வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். முதல் இரண்டு சீசன்களில் பணம் அச்சடிக்கப்படும் ராயல் மின்டிற்குள் நுழைந்து திருடாமல் தாங்களே நோட்டுகளை அச்சிட்டனர். புரொஃபசர் என்ற கதாபாத்திரத்தில் அல்வரோ மார்ட்டெ நடித்து அசத்தியிருப்பார்.
அடுத்த வெளியான சீசன்களில் Bank of Spain வங்கிகளுக்குள் புகுந்து தங்கத்தை உருக்கும் பகுதிகளில் புரொஃபசர் எட்டு பேர் கொண்ட குழுவுடன் இறங்குவார். ஐந்தாவது சீசனில் வெடிகுண்டு, துப்பாக்கிச் சத்தம் நிறைந்தவையாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை வெகுவாக ரசித்தனர்.
இந்நிலையில் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் கடைசி பாகம் இன்று (டிசம்பர் 3) வெளியாகியுள்ளது. புரொஃபசரின் நிலைமை என்ன ஆகப்போகிறது? Bank of Spain வங்கியிலிருந்து எத்தனை பேர் வெளியே வருகிறார்கள் என்பது இதில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வரும் 'பெர்லின்' கதாபாத்திரத்தை வைத்து புதிய தொடரை நீட்டிக்க இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் கடைசி பாகம் இன்று வெளியீடு