ETV Bharat / sitara

ராஜஸ்தான் நீச்சல் குளத்தில் காஜல் அகர்வால்! - ராஜஸ்தான் நீச்சல் குளத்தில் காஜல் அகர்வால்

ராஜஸ்தான் ரிசர்ட் ஒன்றில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் படம் ஒன்றை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

Kajal Aggarwal
Kajal Aggarwal
author img

By

Published : Mar 19, 2022, 5:35 PM IST

ஹைதராபாத் : நடிகர் விஜய்யுடன் ஜில்லா மற்றும் துப்பாக்கி, அஜித் குமாருடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான், ஜீவாவுடன் கவலை வேண்டாம் எனத் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால்.

இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தபோதே தொழிலதிபரான கௌதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தாய்மை பேறு பெற்றதால், படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது அவர் ராஜஸ்தானுக்கு கோடைக்கால சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கிருந்தப்படி இரண்டு படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் ரிசர்ட் ஒன்றில் ஆரவல்லி மலைதொடர்களுக்கு முன்னால் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்கிறார்.

Mommy-to-be Kajal Aggarwal unwinds in Rajasthan, shares pool pic from luxury resort
ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் யோகா பயிற்சியில் காஜல் அகர்வால்

மற்றொரு புகைப்படத்தில் ரிசர்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தாய்மை தாங்கிய வயிறுடன் நீச்சல் அடிக்கிறார். இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ராஜஸ்தான் நீச்சல் குளத்தில் காஜல் அகர்வால்!

முன்னதாக காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

காஜல் அகர்வால் ஹோலி வாழ்த்து

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக சினமிகா (Sinamika) என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ஹயாத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

சிரஞ்சீவி, ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் நடித்திருந்த ஆச்சர்யா படம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க : வரலாற்று சாதனை படைத்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.