இந்தப் படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் இயக்குநாராக அவதாரம் எடுத்துள்ளார்.
அரசியல் திரில்லர் படமான இதில் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமார், டோவினோ தாமஸ், கலாபவன் சஜோன், சாய்குமார் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வில்லனாக நடித்துள்ளார்.
இதையடுத்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளிவந்த லூசிஃபர், எட்டு நாட்களில் 88 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மிகக் குறுகிய நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்த மலையாள படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.
இந்நிலையில், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், வார இறுதிநாட்களில் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் 100 ரூபாய் வசூலை எட்டும் என தெரிகிறது.