நடிகர் மோகன்லால் தனது பெற்றோர்களின் நினைவாக விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலமாக கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இதனிடையே நேற்று தனது 60ஆவது பிறந்தநாளை நடிகர் மோகன்லால் கொண்டாடினார். இதையொட்டி கோவை, ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் வசித்து வரும், சுமார் 60க்கும் மேற்பட்ட முதியோர்களுடன் காணொலி காட்சி மூலம் அவர் உரையாடினார்.
அவர்களிடம் தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற்றதோடு, காணொலி மூலம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதோடு தனது அறக்கட்டளை சார்பில் முகக்கவசங்கள், ஹேண்ட் சானிடைசர்களையும் மோகன்லால் வழங்கினார்.
நடிகர் மோகன்லாலை காணொலிக் காட்சி மூலம் பார்த்தது, தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...உலகநாயகனை பொறாமைப்பட வைத்த லால் ஏட்டன்!