நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக 'பிஎம் நரேந்திர மோடி' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்தை வெளியிடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இத்திரைப்படத்தை, தேர்தல் நேரத்தில் வெளியிடுவது நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், படத்தை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதாவது, மே 24ஆம் தேதியன்று வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகிய இருவரும் 'பிஎம் நரேந்தி மோடி' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.