ETV Bharat / sitara

‘அவனைத் தூக்கு..!’ பிக்பாஸ் நடிகையின் சர்ச்சை ஆடியோ!

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

meera mithun
author img

By

Published : Aug 16, 2019, 9:33 PM IST

Updated : Aug 16, 2019, 10:05 PM IST

சென்னை எழும்பூரில் வசிப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன். இவர் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டிகளை நடத்தும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடிகை மீரா மிதுன் தனது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பல மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்களிடம் லட்சக் கணக்கான ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகவும், தனது நிறுவனத்தின் பெயரை கெடுத்து வருவதாகவும் கூறி புகார் அளித்திருந்தார்.

மீரா மிதுனின் ஆடியோ

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜோ மைக்கேல் பிரவீன், மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாகக் கூறி புகாரளித்தார். மேலும், இது தொடர்பாக மீரா மிதுன் அவரது மேலாளரிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் புகாருடன் சமர்ப்பித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ மைக்கேல் பிரவீன், ஏற்கனவே மீரா மிதுன் மீது முழு ஆதாரத்துடன் புகார் அளித்தேன். இதனால் மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாடல் அழகி மீரா மிதுன் பேசும் ஆடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவின் மூலம் சமூகத்தில் தனக்கான நல்ல பிம்பத்தை வைத்திருக்கும் மீரா மிதுனின் உண்மை முகத்தை தெரிந்துகொண்ட நெட்டிசன்கள் அவரை மிகக் கடுமையான சொற்களால் வசைபாடி வருகின்றனர்.

Intro:Body:நடிகை மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் வசிப்பவர் ஜோ மைக்கல் பிரவீன். இவர் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டிகளை எடுத்து நடத்தும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஜோ மைக்கல் பிரவீன் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் தனது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களிடம் லட்சக் கணக்கான பணத்தை ஏமாற்றியதாகவும், தனது நிறுவனத்தின் பெயரை கெடுத்து வருவதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜோ மைக்கல் பிரவீன் மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாகக் கூறி புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக மீரா மிதுன் அவரது மேலாளரிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் புகாருடன் சமர்ப்பித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ மைக்கல் பிரவீன், ஏற்கனவே மீரா மிதுன் மீது முழு ஆதாரத்துடன் புகார் தெரிவித்திருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், மீரா மிதுன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

(பேட்டி - ஜோ மைக்கல் பிரவீன்)Conclusion:
Last Updated : Aug 16, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.