ETV Bharat / sitara

மு.க. அழகிரியின் தலதளபதி... ட்வீட் - மாஸ்டர் இசை வெளியீட்டில் தளபதி விஜய் பேச்சு

#நண்பர்அஜித் என்ற ஹேஷ்டாக்கில் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டும் எனவும், தல தளபதி என்று பதிவிட்டும் ட்வீட் செய்துள்ளார் மு.க. அழகிரி

MK Alagiri tweets Thapathi Vijay Master movie success
MK Alagiri Tweet
author img

By

Published : Mar 16, 2020, 11:46 AM IST

சென்னை: மாஸ்டர் படம் வெற்றி பெற மு.க. அழகிரி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. விழாவில் கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் வந்திருந்தார் விஜய்.

அவர் மேடையில் பேசும்போது , ஒவ்வொரு முறையும் மோசமாக ட்ரெஸ் செய்வதாகக் கூறி காஸ்ட்யூம் டிசைனர் கோட் சூட் கொடுத்தார். நண்பர் அஜித் மாதிரி ஸ்டைலாக கோட் சூட் போட்டு வந்திருக்கிறேன். நல்லா இருக்கிறதா? என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டார்.

அவரது இந்தப் பேச்சை கேட்டவுடன் அரங்கமே அதிரும் விதத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். திரையுலகில் விஜய்யின் போட்டியாளர் என்று கூறப்பட்டாலும், தனது நண்பர் அஜித் பற்றி அவர் கூறியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் சொன்ன வார்த்தையை, #நண்பர்அஜித் என்ற ஹேஷ்டாக்காக ரசிகர்கள் ட்ரெண்டாக்கினார்கள்.

தல அஜித் ரசிகர்களையும், தளபதி விஜய் ரசிகர்களையும் ஒரு சேர குறிப்பிடும்போது தல தளபதி என ரசிகர்களால் சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் தல தளபதி என்று பதிவிட்டு மாஸ்டர் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என #MasterAudioLaunch #நண்பர்அஜித் ஹேஷ்டாக்குகளோடு தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் மு. க. அழகிரி.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 'கருப்பு கோட் சூட்'- மாஸ்டர் இசை விழாவுக்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.