சித்ராலயா கோபு இயக்கத்தில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் வெற்றிபெற்ற திரைப்படம், 'காசேதான் கடவுளடா'. முத்துராமன், ஶ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் 49 ஆண்டுகள் கழித்து தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. இதனை ஜெயம் கொண்டான், சேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கவுள்ளார்.
இதில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஏற்கனவே 'தில்லுமுல்லு' படத்தின் ரீமேக்கில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்திருந்த நிலையில், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்