கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதனை தடுக்க மாநில அரசும் தன்னாலான முயற்சிகளை எடுத்துவருகிறது. கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல காணொலிகளை அரசு பகிர்ந்துவருகிறது.
இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா குறித்த விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் சென்னை எப்படி பல பேரிடர்களில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்பது குறித்தும், கரோனா தொற்றில் இருந்து எப்படி சென்னை மீண்டுவரும் என்பது குறித்து நடிகர் ரா. பார்த்திபன் அதில் விளக்கமளிக்கிறார் . தற்போது அந்தக் காணொலி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க... ஒத்த செருப்பைத் தொடர்ந்து ரீமேக் ஆகும் பார்த்திபனின் 'ஹவுஸ்ஃபுல்'