'The wire' சீரிஸ் மூலம் பிரபலமாக அறியப்படும் நடிகர் மைக்கேல் கே. வில்லியம், நேற்று ப்ரூக்லினில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார். அளவுக்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவரது மரணம் ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
1995ஆம் ஆண்டு வெளியான ‘மக்ஷாட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மைக்கேல் கே. வில்லியம்ஸ். எச்பிஓவின் ‘தி வயர்’ தொலைக்காட்சித் தொடரில், லிட்டில் ஓமர் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அவர் கடைசியாக இந்த ஆண்டு வெளியான ‘பாடி ப்ரோக்கர்ஸ்’ எனும் படத்தில் உட் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சினிமாவை காப்பாற்றுவது சிறிய படங்கள்தான் - இயக்குநர் பேரரசு!