ETV Bharat / sitara

'மெரினா புரட்சியின்போது உணவு பாக்கெட்டில் காண்டம்’ - ஆய்வுக்கு வலியுறுத்தும் திருமா!

சென்னை: மெரினா போராட்டத்தின்போது, சில உணவு பொட்டலங்களில் காண்டம் பாக்கெட்டுகள் இருந்ததாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

thol.thirmavalavan
author img

By

Published : Aug 5, 2019, 6:33 AM IST

'மெரினா புரட்சி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நல்லகண்ணு, திருமாவளவன், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் பொன்வண்ணன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது திருமாவளவன் பேசுகையில், ‘மெரினா போராட்டம் நடைபெற்றபோது யார் யாரோ உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். அது கார்ப்பரேட் கம்பெனிகளாக கூட இருக்கலாம். ஒவ்வொரு உணவுப் பாக்கெட்டிலும் ஒரு காண்டம் இருந்தது. இது என்ன காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆய்வு செய்ய வேண்டும்.

எந்த புரட்சியும் அமைப்பு சார்ந்து நிகழ்கின்ற போது தான் வெற்றி பெறுகிறது. மெரினா போராட்டம் நல்ல தொடக்கம், ஆனால் வேதனையான முடிவு. நம்முடைய கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம் மெரினா போராட்டம். இது தமிழர் பண்பாடு என்பது காளை மாடு என்கிற ஒற்றை அடையாளத்துடன் இல்லை அதைத்தாண்டி இருக்கிறது.

தொல் திருமாவளவன் பேச்சு

தமிழ்நாட்டில் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக ஊடுருவி பரவி வருகிறார்கள். சாதி, மதவெறியர்களும் வெவ்வேறு வடிவங்களில் நம்முடைய உணர்வுகளுக்கு ஏற்ப அரவணைத்து ஊடுருவ பார்க்கிறார்கள். அகோரிகள், நிர்வாண சாமியார்கள் கூட தமிழ்நாட்டிற்கு வருவார்கள். நாம் வீதிகளில் நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது அவர்களை வணங்கும் வாய்ப்பிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Intro:மெரினா புரட்சி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புBody:மெரினா புரட்சி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் நல்லகண்ணு திருமாவளவன் மனுஷ்யபுத்திரன் இயக்குனர் பொன்வண்ணன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில்

மெரினா போராட்டம் நடைபெற்றபோது அதிர்ச்சியான தகவல் அந்த போராட்டத்தில் யார் யாரோ உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள் அது கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக கூட இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு உணவுப் பாக்கெட்டிலும் ஒரு கண்டம் இருந்தது தெரிந்தது இது என்ன காரணத்திற்காக வைக்கப்பட்டது என்ற ஆய்வு செய்ய வேண்டும்

இதன் இதன் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டியது இளம் தலைமுறையின் கடமை எந்த புரட்சியும் அமைப்பு சார்ந்து நிகழ்கிற போது தான் வெற்றி பெறுகிறது மெரினா போராட்டம்

உள்ளபடியே நல்ல தொடக்கம் வேதனையான முடிவு போராட்டம் நோக்கம் வெற்றி பெற்றது மக்கள் எவ்வளவு கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்
ஒரு போராட்டம் தோல்வியில் முடிவதற்கு காரணம் அமைப்பு சார்ந்து இல்லாமல் இருப்பதுதான் நான் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக செயலுக்கு வரவில்லை உண்மையில் இந்த சமூகம் என்னவாக இருக்கிறது அரசியல் என்னவாக இருக்கிறது கட்சியை யாரால் வழிநடத்த முடியும் யாரால் புரட்சியை வென்றெடுக்க முடியும் என்பதை எல்லாம் இப்போது தான் உணர முடிகிறது மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்

தமிழ்நாட்டில் வட பகுதியை சேர்ந்தவர்கள் மிக எளிதாக ஊடுருவி பரவிய வருகிறார்கள் சாதி, மதவெறியர்களும் வெவ்வேறு வடிவங்களில் நம்முடைய உணர்வுகளுக்கு ஏற்ப அரவணைத்து ஊடுருவ பார்க்கிறார்கள் அகோரிகள் நிர்வாண சாமியார்கள் கூட தமிழகத்திற்கு வருவார்கள் நாம் வீதிகளில் நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது அவர்களை வணங்குவோம் வாய்ப்பிருக்கிறது

நம்முடைய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம் மெரினா போராட்டம் இது தமிழர் பண்பாடு என்பது காளை மாடு என்கிற ஒற்றை அடையாளத்துடன் இல்லை அதைத் தாண்டி இருக்கிறது

Conclusion:என்னுடைய முப்பதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் இன்று சொல்கிறேன் நான் இன்னும் இந்துப் பண்பாட்டை தான் தமிழர் பண்பாடு என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.