ETV Bharat / sitara

'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள்: யுவன், வெங்கட்பிரபுவின் குடும்ப பாடல்

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ டீசர் தற்போது வெளியாகி சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

maanaadu
maanaadu
author img

By

Published : Jun 19, 2021, 7:05 PM IST

Updated : Jun 19, 2021, 7:13 PM IST

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பொலிட்டிக்கல் திரில்லரான ‘மாநாடு’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கிவரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர். யுவன் இதற்கு இசையமைத்து வருகிறார், ஜூன் 21ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ வெளியாகிறது.

தற்போது, மதன் கார்க்கி எழுதியுள்ள 'மெஹ்ரேஸிலா' பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் வெங்கட் பிரபுவும் யுவனும் தோன்றி 'மெஹ்ரேஸிலா' பாடல் குறித்து பேசியுள்ளனர். 'மெஹ்ரேஸிலா' பல அர்தம் இருப்பதாகவும் அது பாடலாசிரியர் மதன் கார்கிக்கு மட்டுமே தெரியும் எனவும் வெங்கட் பிரபு கூறினார். மேலும் இது தங்களது மற்றொரு குடும்ப பாடல் என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீசரில் வரும் இசையை வைத்து பார்கையில், இது மெலோடி வகை பாடலாக இருக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'மாநாடு' படத்தின் பாடல்கள் உரிமை யுவன் சங்கர் ராஜாவின் U1 நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநாடு வேற லெவல்: உதயா கொடுத்த தகவல்!

Last Updated : Jun 19, 2021, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.