சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் மாயோன். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள இப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த டீசரானது பார்வை சவால் கொண்டவர்களுக்காக சிறப்பு ஆடியோ டிஸ்கிரிப்ஷன் முறை மூலம் உருவாக்கப்பட்டது.
இதற்காக எபிலிட்டி ஃபவுண்டேஷன் சார்பில், பார்வை சவால் கொண்டவர்கள் வரவழைக்கப்பட்டு டீசர் பிரத்யேகமாகக் காண்பிக்கப்பட்டது. அவர்களால் பார்க்க முடியாவிட்டாலும் ஆடியோ டிஸ்கிரிப்ஷன் முறையில் புரியும்படி திரையிடப்பட்டது.
இது குறித்து சிபி சத்யராஜ் கூறுகையில், "பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இதுபோன்ற டீசர் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்படத்தின் கதை பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். இளையராஜா இசையில் நடித்ததும் பெருமை. இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்தின் பங்களிப்பு மிகச் சிறப்பானது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நரேன் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்த கார்த்தி!