நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மார்ச் மாதத்தில் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில், வழக்கம் போல் விஜய் தனது பாணியில் 'குட்டி ஸ்டோரி' கூறி, ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்திருந்தது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்ரெண்ட் செய்தனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுப் புதிய போஸ்டரை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட்டனர். அதில் 'மாஸ்டர்' உங்களை விரைவில் சந்திப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
-
#Master #MovieTrivia @actorvijay @Team_VijaySethu
— INOX Leisure Ltd. (@INOXMovies) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
@Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators #kuttistory #Vijay #simran pic.twitter.com/hUcOz0Lkv4
">#Master #MovieTrivia @actorvijay @Team_VijaySethu
— INOX Leisure Ltd. (@INOXMovies) April 21, 2020
@Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators #kuttistory #Vijay #simran pic.twitter.com/hUcOz0Lkv4#Master #MovieTrivia @actorvijay @Team_VijaySethu
— INOX Leisure Ltd. (@INOXMovies) April 21, 2020
@Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators #kuttistory #Vijay #simran pic.twitter.com/hUcOz0Lkv4
இதனையடுத்து மல்டிபிளெக்ஸ் திரையரங்கான ஐநாக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்று ட்வீட் செய்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த அறிவிப்பையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.