'மாநகரம்', 'கைதி' போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கி முடித்துள்ளார். கரோனா பொது முடக்கம் காரணமாக, இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி போன நிலையில், தற்போது வரும் பொங்கலுக்கு வெளியாவதாகப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது இப்படத்தின் தணிக்கை முடிந்துவிட்டதாகவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யு சான்றிதழ் பெற படக்குழு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் வெளியானால், அடுத்த ஒரு வாரத்திற்கு வேறு எந்தப் படத்தையும் வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சிம்புவின் 'ஈஸ்வரன்' உள்ளிட்ட சில படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க... ட்விட்டரில் மீண்டும் மாஸ்காட்டிய 'மாஸ்டர்' - மகிழ்ச்சியில் ரசிகர்கள்