ETV Bharat / sitara

மார்வல் திரைப்படங்கள் பற்றி மட்டமாக பேசியதற்கு மார்டின் ஸ்கார்சசி விளக்கம்! - மார்டின் ஸ்கார்சசி

மார்வல் திரைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களே அல்ல என பேசியதற்கு பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்டின் ஸ்கார்சசி விளக்கமளித்துள்ளார்.

Martin Scorsese
author img

By

Published : Nov 5, 2019, 7:01 PM IST

ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மார்டின் ஸ்கார்சசி. அவர் ஹாலிவுட் திரைப்படங்களை வேறு தளத்திற்கு கொண்டு சென்றவர் என்று சொன்னாலும் மிகையாகாது. சமீபத்தில் அவர் மார்வல் திரைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களே அல்ல என ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு மார்வல் ரசிகர்கள் பலரும் மார்டினை கலாய்த்தனர். மார்வல் படத்தில் நடித்தவரான சாமுவேல் ஜாக்சன், மார்டின் ஸ்கார்சசியை விமர்சித்தார்.

தற்போது மார்டின், மார்வல் திரைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களே அல்ல என கூறினேன். அதுகுறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், பல திறமையான கலைஞர்கள் சேர்ந்து இங்கு பல திரைப்படங்களை உருவாக்குகின்றனர். அதை நீங்களும் திரையில் கண்டு மகிழ்கிறீர்கள். ஆனால் அந்தத் திரைப்படங்கள் என்னை ஈர்க்கவில்லை என்பது என் தனிப்பட்ட ரசனை, கருத்தை சார்ந்தது.

எனக்கு புரிகிறது, நானும் இந்தக் காலத்து இளைஞனாக இருந்திருந்தால், அந்தத் திரைப்படங்கள் என்னைக் கவர்ந்திருக்கலாம், நானும் அதுபோன்ற ஒரு படத்தை உருவாக்க நினைத்திருக்கலாம். ஆனால் என்னை பாதித்த திரைப்படங்கள் மனித உணர்வுகளை, மனக் கிளர்ச்சியை பிரதிபலிக்கும் படங்களாக இருந்தது. அப்படியான படங்களை உருவாக்கவே என்னை தூண்டியது என குறிப்பிட்டுள்ளார்.

Martin Scorsese
The Irishman

மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் அல்பசினோ, ராபர்ட் டீனீரோ, ஜோ பெஸ்கி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி ஐரிஸ்மேன்’ (The Irishman) திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸ்கார் சென்ற முதல் நைஜீரிய திரைப்படம் புறக்கணிப்பு - பின்னணி என்ன?

Intro:Body:

Martin Scorsese on marvel movies 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.