ETV Bharat / sitara

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்! - விஷ்ணு விஷாலின் படங்கள்

சென்னை: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VV
VV
author img

By

Published : Mar 22, 2021, 7:29 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு எனக்கு நான்கு படங்கள் வெளியாக உள்ளன. 'இன்று நேற்று நாளை 2', 'ராட்சசன் 2' படத்திற்கான பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டு இருக்கிறது. ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.

விரைவில் தேதி அறிக்கப்படும். நீங்கள் எல்லோரும் எனக்கு நிறைய சப்போர்ட் செய்துள்ளீர்கள். என்னைத் திரையில் பார்த்து நீண்ட நாள்கள் ஆகின்றன. ஆனாலும் தொடர்ந்து செய்தியில் வருகின்றேன்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

சூரியுடனான பிரச்சினை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அவருடன் நான் 10 ஆண்டுகள் பழகியுள்ளேன். நிறைய தவறான விஷயங்கள் சொல்லலாம், ஆனால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனக்கும் எனது தந்தைக்கும் அந்த நில விவகாரத்தில் தொடர்பு இல்லை.

எனது தந்தையை கடவுள் என்றவர் தற்போது 420 என்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும். சூரி மூலமாகப் பணம் சம்பாதிக்கத் தேவையில்லை. அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். உண்மை ஒருநாள் வெளியில் வரும்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

காதலில் நம்பிக்கை போய்விட்டது. ஏற்கனவே ரஜினியுடன் நான்கு ஆண்டு காதல் ஏழு ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. வீட்டில் நடைபெற்ற விருந்தில் ஏற்பட்ட தகராறு குறித்து வீட்டின் உரிமையாளர் தவறாகப் புரிந்துகொண்டார். தற்போது அவர் நன்றாக எங்களிடம் பேசுகிறார் பழகுகிறார். எந்தப் பிரச்னையும் இல்லை.

'காடன்' படத்தைப் பொறுத்தவரை யானையுடன் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. சவால்கள் எனக்குப் பிடிக்கும் என்பதால் தன்னம்பிக்கையுடன் நடித்தேன். முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்க ஆசையாக உள்ளது. 'ராட்சசன்' வெற்றிக்குப் பிறகு எனக்கு ஒன்பது படங்கள் ட்ராப் ஆயின. இதனால் எனது சம்பளம் 60 லட்ச ரூபாய் வரை குறைத்துக்கொண்டேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.