கரீபியன் கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட சீரிஸ் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்'. இப்படங்கள் முழுவதும் பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தன. இப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜானி டெப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தை பெண் கதாபாத்திரம் வைத்து ரீமேக் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான திரைக்கதையை கிறிஸ்டினா ஹோட்சன் எழுதியுள்ளார். மர்கோட் ராபி நடிக்கவுள்ள இந்தப் படம் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படங்களில் இருந்து தனித்து தெரியும் என ஹாலிவுட் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை இயக்கும் இயக்குநர், துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.