நடிகை மஞ்சிமா மோகன் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை மஞ்சிமா மோகன், 1997ஆம் ஆண்டு 'கலியூஞ்சல்' என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்பு 2015ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'ஒரு வடக்கன் செஃல்பி' திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பின் சத்ரியன், இப்படைவெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
![Manjima Mohan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4813780_manju-insta.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மஞ்சிமா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விபத்து நிகழ்ந்து சிகிச்சைப் பெற்று ஒய்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இரண்டு வாரங்களுக்கு முன் ஒர் விபத்து நடந்தது. அதனால் காலில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்தச் சிகிச்சையால் அடுத்த ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உங்களது போன் கால்கள், மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருந்தற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்வு என்னை மாற்றியது. காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று சொல்வது போல் இதற்கும் ஓர் காரணம் இருக்கும் என்று நம்புகிறேன்.
முன்னதாக சிலர் என்னிடம் நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை என்ன என்று கேட்டபோது, அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படி எதுவும் இல்லை என்று சொன்னேன். ஆனால் இப்போது அது நடந்து விட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.
இதையும் வாசிங்க: நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் புகைப்படங்கள்!