ETV Bharat / sitara

விபத்தில் சிக்கிய மணிமேகலை-ஹுசைன் - மணிமேகலை கார்விபத்து

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை மீண்டும் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய மணிமேகலை
விபத்தில் சிக்கிய மணிமேகலை
author img

By

Published : Sep 22, 2021, 3:29 PM IST

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை. இவரது கணவர் ஹுசைன். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கியுள்ளார்கள். இந்தக் கார் குறித்த விவரங்களை மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக் கூடாது என்பதற்காக அந்தக் காரில் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள். அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் மணிமேகலை, ஹுசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை. கார் சேதமடைந்துள்ளது. இதனைக் காணொலியாக மணிமேகலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொகுப்பாளினி மணிமேகலை 2017ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு தனக்குப் பல சோதனைகளைத் தந்ததாகவும் சுடுதண்ணி காலில் கொட்டியது, தற்போது விபத்து எனத் தொடர்ந்து சோதனைகள் ஆக இருப்பதால் 2022 வந்தவுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என்றும் மணிமேகலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 3 நடிகர்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.