ETV Bharat / sitara

5 நாளாக தனியறையில் இருக்கும் மணிரத்னம் மகன்: காரணம் என்ன தெரியுமா? - coona virus

இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாள்களாகத் தனியறையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களாக தனியறையில் இருக்கும் மணிரத்னம் மகன்

author img

By

Published : Mar 22, 2020, 11:48 AM IST

உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்திவரும் கரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக வெளிநாடுகளிலிருந்து, இந்தியா வரும் பயணிகள் குறைந்தது 14 நாள்களுக்குத் தங்களைத், தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மணிரத்னத்தின் மகன் நந்தன் கடந்த வாரம் லண்டனிலிருந்து, சென்னை வந்துள்ளார். இவருக்கு வைரஸ் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு திரும்பியதிலிருந்து தனியறையில் உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “தனிமையில் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. தனியறையில் 14 நாள்கள் இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. சாப்பிடுவதற்குகூட நான் வெளியே செல்லவில்லை.

நான் இருக்கும் அறை பக்கத்தில் உள்ள மற்றொரு அறையில் உணவு வைத்துவிடுவார்கள். அரசு அறிவுறுத்தியதை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கரோனா வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள அறிவுரை வழங்கிய சத்யராஜ் மகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.