மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒன்'. இயக்குநர் சந்தோஷ் விஷ்வநாத் இயக்கியுள்ள இப்படத்திற்கு சஞ்சாய் திரைக்கதை எழுதியுள்ளார். ICHAIS தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் மம்மூட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அறிவித்தபடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்த்த பலரும் கேரள முதலமைச்சர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி சிறப்பாக நடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
முன்னதாக மம்மூட்டி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மந்தையிலிருந்து தப்பித்த ஆடு ஓநாயிடம் மாட்டும் 'கன்னி மாடம்' சொல்லும் பாடம்