செக் குடியரசில் நவே மஸ்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் 23.25 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 19 வயதே ஆன 'திங் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் கடந்த 15 நாட்களில் ஐந்து தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், பெண்கள் பிரிவு தடகள போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்கிறார்.
-
Supergirl !! @HimaDas8 #himadas She just will not take impossible for an answer .. https://t.co/iiXwh1O6Ph
— Shekhar Kapur (@shekharkapur) July 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Supergirl !! @HimaDas8 #himadas She just will not take impossible for an answer .. https://t.co/iiXwh1O6Ph
— Shekhar Kapur (@shekharkapur) July 21, 2019Supergirl !! @HimaDas8 #himadas She just will not take impossible for an answer .. https://t.co/iiXwh1O6Ph
— Shekhar Kapur (@shekharkapur) July 21, 2019
ஜூலை 7ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் ஹிமா. கிளாட்னோவில் நடந்த தடகள போட்டியிலும் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். கடந்த 17ஆம் தேதி அன்று செக் குடியரசில் தபோர் அத்லெட்டிக் மீட்டில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றார் ஹிமா தாஸ்.
-
Congratulations #HimaDas on 5th gold medal in just 19 days, making India proud 👏👏 🥇 pic.twitter.com/YJ0PVD9oqn
— Mallika Sherawat (@mallikasherawat) July 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations #HimaDas on 5th gold medal in just 19 days, making India proud 👏👏 🥇 pic.twitter.com/YJ0PVD9oqn
— Mallika Sherawat (@mallikasherawat) July 21, 2019Congratulations #HimaDas on 5th gold medal in just 19 days, making India proud 👏👏 🥇 pic.twitter.com/YJ0PVD9oqn
— Mallika Sherawat (@mallikasherawat) July 21, 2019
அடுத்தடுத்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் ஹிமா தாஸ்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மேலும், அசாமில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தனது சம்பளத்தில் பாதியை நிவாரண நிதியாக அளித்து வியக்க வைத்துள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், இயக்குநர் சேகர் கபூர் ஆகியோர் ஹிமா தாஸ்க்கு ட்விட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
"19 நாட்களில் ஐந்து தங்கப்பதக்கம் நினைத்து பார்க்க முடியாத வெற்றி. இந்திய நாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று மல்லிகா ஷெராவத் பதிவிட்டுள்ளார்.