ETV Bharat / sitara

மாலிக் - இந்திய யதார்த்த கேங்ஸ்டர் சினிமாக்களில் ஒரு மைல்கல் - பகத் பாசில்

2021இல் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘மாலிக்’ திரைப்படம் சர்வதேச ‘ராட்டர்டாம்’ திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது. இத்திரைப்படம் இந்திய கேங்ஸ்டர் சினிமாவின் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இப்படத்தின் திரைமொழியும், திரைக்கதையும் நிச்சயம் வளரும் திரைப்பட இயக்குநர்களுக்குப் பாடமாக அமையும்.

மாலிக் - இந்திய எதார்த்த கேங்ஸ்டர் சினிமாக்களில் ஒரு மைல்கல்

author img

By

Published : Jan 12, 2022, 4:04 PM IST

பொதுவாக கேங்ஸ்டர் சினிமாக்களுக்குக் கதைக்களம் பெரும்பாலும் ஒன்றுதான். ’அண்டர் டாக் ஸ்டோரி’ (Under dog story) என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதாவது, அடித்தட்டிலிருந்து ஒருவன் உச்ச அதிகாரத்திற்கு உயரும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய கதையம்சத்தை அப்படிச் சொல்லுவர்.

இந்த வகையான ‘அண்டர் டாக் ஸ்டோரி’ திரைப்படங்கள் பலதரப்பட்ட மக்களால் பெரிதும் ஈர்க்கப்படுபவையாக இருக்கின்றன. நம் இந்திய சினிமாவில் வெளியான பெரும்பான்மையான கேங்ஸ்டர் சினிமாக்கள் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டவைதான்.

எது முழுமையான கேங்ஸ்டர் சினிமா?

கேங்ஸ்டர் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனின் பிரதிபலிப்பை, வெறும் ஒரு வெற்றிபெரும் நாயகனின் கதையை வைத்து காண்பித்துவிட முடியாது. அது முழுமையான கேங்ஸ்டர் சினிமாவாக இருக்காது. ஒரு கேங்ஸ்டர் சினிமா பெரிதும் கவனிக்க வைக்க வேண்டியது அந்தக் கதை நடக்கும் நிலப்பரப்பைத் தான்.

உலகளாவிய கேங்ஸ்டர் சினிமாக்களில் அதன் நிலப்பரப்பை காட்சிப்படுத்துவது மிக முக்கியத்துவமாக இருக்கும். ஒரு கேங்ஸ்டரின் வாழ்வியலில் அவனின் நிலப்பரப்பு மிக முக்கியப்பங்கு வகிக்கும். ‘சிட்டி ஆஃப் காட்’ (City of God), 'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்’ (Gangs of wasseypur), 'கம்மட்டிப்பாடம்’ (kammattipaadam), 'சுப்ரமணியபுரம்’ (Subramaniyapuram), 'புதுப்பேட்டை' (Pudupettai) எனப் பல திரைப்படங்களில் கேங்ஸ்டர்கள் வாழும் நிலப்பரப்பு ஒரு தனிக் கதாபாத்திரமாகவே இருக்கும்.

ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை, சில திரைப்படங்களில் காண்பிப்பதுபோல் மிக மகிழ்ச்சியாக, எப்போதும் ஊருக்குள் ஹீரோ போல் மனநிலையில் சுற்றுவதுபோல் நிஜத்தில் இருப்பதில்லை. அவர்களின் வாழ்க்கையில் விருப்பு, வெறுப்புகள் சமமில்லாதவாறே இருக்கக் கூடும்.

சாவின் மீது சலிப்பு வந்திருக்கக் கூடும். குற்றவுணர்வே வாழ்வாகக் கூட மாறக் கூடலாம். இப்படி ஒரு கேங்ஸ்டரின் மனநிலையில் பல கோணங்கள் இருக்கக் கூடும் சூழலில் தொடர்ந்து அவனை எல்லா வல்லமைகொண்ட நாயகனாக மட்டுமே சில படங்களில் காட்டுவது நிச்சயம் அபத்தமே.

அதேபோல இங்குப் பலரும் உலக சினிமா தாக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படம் எடுக்கிறோம் என்று கூறி நம் சூழலுக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத ஒரு அமைப்பு கொண்ட கேங்ஸ்டர் வாழ்வியல் முறைகளைத் திரைப்படத்தில் காண்பிப்பதும் வழக்கமாக உண்டு. நம் சூழல் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் கலாசாரத்தைக் கூறும்போதுதான் அது மக்களைச் சென்றடையும்.

ஏன் மாலிக் ஒரு மைல்கல்?

கடந்த ஆண்டில் வெளியான படங்களில் இந்தியாவின் ஒரு முக்கியப் படைப்பாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ’மாலிக்’ திரைப்படத்தைக் கருதலாம். இந்திய கேங்ஸ்டர் சினிமாக்களில் யதார்த்தமான காட்சியமைப்பில், சரியான கதாபாத்திர வடிவமைப்பில், நேர்த்தியான திரைக்கதையில் வெளியான மிகச் சில திரைப்படங்களில் ’மாலிக்’ திரைப்படத்தைச் சேர்த்தால் மிகையாகாது.

மாலிக் திரைப்பட மேக்கிங் ஸ்டில்
மாலிக் திரைப்பட மேக்கிங் ஸ்டில்

பெரும்பாலும் குறைந்தபட்ச முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை (Minimalistic films) எடுத்துவரும் மலையாள சினிமா மத்தியில் ஒரு பெரிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படம்தான் ’மாலிக்’. இதற்கான முதலீடு இப்படத்திற்குத் தேவையான ஒரு செலவுதான். நாம் மேலே கண்டதுபோல் இந்தத் திரைப்படமும் ஏறத்தாழ ஒரு ‘அண்டர் டாக் ஸ்டோரி’ (Under dog story) தான். ஆனால் இதன் திரைக்கதையிலும், யதார்த்த காட்சியமைப்பிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் மாறுபட்டிருக்கும்.

இந்தக் கதை, அது நடக்கும் கடலோர கிராமமான ‘ரமடப்பள்ளி’, அந்த ஊரின் அரசியல் என்று அனைத்தும் மிக நுணுக்கமாக அணுகப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நாமே அந்த ஊருக்குப் போய்வந்த ஒரு உணர்வைத் தரும். அதற்குப் பெரிய காரணம் ஒளிப்பதிவுதான்.

ஆரம்பக் காட்சியான 12 நிமிடக் காட்சியை ஒரே சாட்டில் எடுப்பதிலிருந்தே ஒளிப்பதிவின் நேர்த்தி தொடங்குகிறது. ஒரு 12 நிமிட காட்சியில், அத்தனை நடிகர்கள், மாறும் கேமரா அசைவுகள், மாறும் ஒளியமைப்புகள் என அனைத்தையும் தாண்டி கடுமையான ஒத்திகைகள் மூலம் இக்காட்சியை இப்படக்குழுவினர் சாத்தியப்படுத்தினர்.

அறிமுகக் காட்சி மட்டுமின்றி அனைத்துக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாகவே இருக்கும். குறிப்பாக இப்படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகள் மிக யதார்த்தமாக, உண்மைக்கு மிக நெருக்கமாகவே இருக்கும். துப்பாக்கிச் சூடு சண்டைகளும், பல வெடிகுண்டு வெடிப்பு காட்சிகளின் யதார்த்தத் தன்மைகளும் ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ (Battle of algiers) திரைப்படத்தை ஞாபகப்படுத்தியது.

மாலிக் திரைப்பட மேக்கிங் ஸ்டில்
மாலிக் திரைப்பட மேக்கிங் ஸ்டில்

எல்லாவற்றிற்கும் மேலாக பகத் பாசிலின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். அவரின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான கதாபாத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை மாற்றங்களையும், வயது முதிர்ச்சிகளையும் பிரதிபலிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாகப் பொருந்திப் போயிருப்பார் பகத். மேலும், இத்திரைப்படத்தில் நடித்த எல்லா நடிகர்களுமே சிறப்பான நடிப்பையே வெளிக்காட்டிருப்பார்கள்.

மாலிக் திரைப்படக் காட்சி
மாலிக் திரைப்படக் காட்சி

இப்படி ஒரு கேங்ஸ்டர் கதையை இவ்வளவு யதார்த்த முறையில், நேர்த்தியான கதாபாத்திர வடிவமைப்பில் கூறிய மகேஷ் நாராயணன் இன்னும் பல விருதுகளை அள்ள வேண்டும். ராட்டர்டாம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் ’மாலிக்’ இடம்பெற்று விருதுகளைக் குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:ராக்கி - கோலிவுட் கேங்ஸ்டர் சினிமாக்களின் புதியதோர் அலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.