ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து திரை பிரபலங்கள், வீட்டில் எப்படி நேரத்தைக் கழிக்கிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.
சிலர் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் வீட்டில் தன் மனைவி குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தைச் செலவிட்டுவருகிறார்.
- View this post on Instagram
Finding our reflections!! Mastering the mirror selfie with @sitaraghattamaneni ❤️❤️❤️
">
மகேஷ் பாபு வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை, அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தற்போது மகள் சிதாராவுடன் மகேஷ்பாபு கண்ணாடி முன்பு எடுக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு 'மாஸ்டரிங் மிரர் செல்ஃபி: மகள் சிதாரா' என்று கேப்ஷன் வைத்துள்ளார்.
இதற்கு முன்பு மகன் கெளதமுடன் மகேஷ் பாபு, யார் உயரமானவர்கள் என்ற வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்திருந்தனர். இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் அதிகம் கவரப்பட்டு வருகிறது.