மகேஷ் பாபு நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் 'சரிலேரு நீகேவரு' (Sarileru Neekevvaru). அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான இதில் ராஷ்மிகா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு தற்போது தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த 'கீதா கோவிந்தம்' பட இயக்குநர் பரசுராம் இயக்கும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தில் அனிருத் பாடல் பாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
-
Taking off on this whole new journey of action and entertainment! Join us this Sankranthi! :) #SVPFirstNotice @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/so7pWW1ShP
— Mahesh Babu (@urstrulyMahesh) July 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Taking off on this whole new journey of action and entertainment! Join us this Sankranthi! :) #SVPFirstNotice @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/so7pWW1ShP
— Mahesh Babu (@urstrulyMahesh) July 31, 2021Taking off on this whole new journey of action and entertainment! Join us this Sankranthi! :) #SVPFirstNotice @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/so7pWW1ShP
— Mahesh Babu (@urstrulyMahesh) July 31, 2021
போஸ்டரில் மகேஷ் பாபு சிவப்பு நிற காரில் ஸ்டைலிஷாக இறங்குவது போன்று உள்ளது. ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.