ஹைதராபாத்: கரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்கு ஐந்து முக்கிய விதிமுறைகளை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கூறியுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கூறும் யோசனைகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால் அது கரோனா தொற்றி பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த சமயத்தில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளையும் அவர் கூறியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
விதி 1 - வீட்டை விட்டு வெளியேறாமல் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்
விதி 2 - அவ்வப்போது சோப் பயன்படுத்தி சுத்தமாக கைகளைக் கழுவ வேண்டும். கைகளுக்கு கிருமி நாசினி (சானிடைஸர்) உபயோகப்படுத்த வேண்டும்.
விதி 3 - தும்மல், இருமல் ஏற்பட்டால் முழங்கையை மூடிக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். உள்ளங்கைகளை வைத்து வாயை மூடிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
விதி 4 - வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால், சமூக இடைவெளியை மனதில் வைத்துக்கொண்டு குறைந்தது 3 அடியாவது மற்றவரிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்.
விதி 5 - அடிக்கடி கண், மூக்கு, உதடு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனிதம் எழும்; இந்தப் போரில் நாம் வெல்வோம் - 'தெலுங்கு பிரின்ஸ்' மகேஷ் பாபு