ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து திரை பிரபலங்கள், தங்கள் வீட்டில் என்ன செய்து நேரத்தை கழிக்கிறார்கள் என்று அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.
சிலர் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும் வீட்டில் தன் மனைவி குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டுவருகின்றார்.
மகேஷ் பாபு வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு க்ளீன் ஷேவ் லுக்கில் அந்தப் புகைப்படத்தில் இருப்பதுதான் பேசு பொருளாகியிருப்பதற்கு காரணமாம்.
தனது அடுத்தப் படத்திற்காக 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் இயக்குநர் பரசுராமுடன் மகேஷ் பாபு இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு சேலஞ்ச் விடுத்த 'நாரப்பா' வெங்கடேஷ்