தனது யதார்த்த படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குநர் மகேந்திரன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நண்டு, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, ஜானி ஆகிய திரைப்படங்கள் மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்களம், அழகுணர்ச்சி கொண்ட காட்சியமைப்புகளால் அனைவரது மனதையும் களவாடி சென்றது. ரஜினியின் உடல் பாவணை, ஸ்டைல் அனைத்திலும் மாற்றத்தை கொண்டு வந்தவர் மகேந்திரன்.
அவரது மறைவு தமிழ் சினிமாவின் பெருந்துயரம்தான். ஆனால் என்றும் அவரது நினைவுகளை பேசும் வகையில் அருள்செல்வன் என்பவர் இயக்குநர் மகேந்திரன் குறித்து 'சொல்லித் தந்த வானம்' என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் பலரது அனுபவங்களை அவர் தொகுதுள்ளார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பங்கேற்றார்.
![சொல்லி தந்த வானம் புத்தகம் வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-mahendran-memorybook-script-7204954_29072019153133_2907f_1564394493_1016.jpg)
நூலை பாக்யராஜ் வெளியிட இயக்குநர் ’யார்’ கண்ணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
![இயக்குநர் பாக்யராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-mahendran-memorybook-script-7204954_29072019153133_2907f_1564394493_849.jpg)