நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான மகத், மாடல் அழகி பிராச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இம்மாதம் 7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் முதன்முறையாக மகத் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், தனது மகனுக்கு ’அதியமான் ராகவேந்திரா’ எனப் பெயர் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் மகத் தற்போது, ‘காதல் கண்டிஷன் அப்ளை’, ’இவன் தான் உத்தமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ஆடை தேவையில்லை, ஹேட் போதும்’ - ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த ஷாமா!